விளத்தூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2022 03:07
மானாமதுரை: மானாமதுரை அருகே விளத்தூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷே விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை அருகே விளத்துர் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக யாகசாலை பூஜைகள் கடந்த 4ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து முதலாம் கால யாக பூஜை,பூர்ணாகுதி,2ம் கால யாக சாலை பூஜை,5ம் தேதி 3ம் கால யாகசாலை பூஜை, 6ம் தேதி அதிகாலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக கோவிலை சுற்றி கொண்டு வந்து ராஜகோபுரத்திற்கும் மற்ற பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன கோயில் முன்பாக அன்னதானமும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விளத்தூர் ஊராட்சி தலைவர் வாலகுருநாதன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.கும்பாபிஷேக விழாவில் விளத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.