பெருநாழி: பெருநாழி அருகே அவத்தாண்டை கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த ஜூலை 5 அன்று முதல் காலயாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பூர்ணாஹுதி உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 9 மணி அளவில் அரியநாச்சி அம்மன், கணபதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.