நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா: இந்திர விமானத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2022 10:07
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவின் 5ம் நாளான நேற்று இரவு சுவாமி, அம்பாள் இந்திர விமானத்தில் வீதி உலா நடந்தது. நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. விழாவின் 5ம் நாளான நேற்று காலை வெள்ளி ரிஷப வானகத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா, இரவு இந்திர விமானத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. முன்னதாக கோயில் கலையரங்கில் மாலை 4 மணிக்கு அனுசுயாவின் பக்தி சொற்பொழிவு, அப்பர் தேவார பாடசாலை மாணவர்களின் பக்தி நிகழ்ச்சி, கோமதி திருநாவுக்கரசுவின் பக்தி சொற்பொழிவு, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்கிளை கமிட்டி சார்பில் கூட்டு வழிபாடு நடந்தது. இரவு கல்பவிருட்சாநாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், டாக்டர். காயத்ரி பாலசந்திரனின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.