பதிவு செய்த நாள்
08
ஜூலை
2022
04:07
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் திருப்பணியில் தற்போது புதிய ஏற்பாடாக கர்பகிரகங்களை சுற்றிலும் நீராழி அமைக்கும் பணி நடக்கிறது.
இங்கு கடந்த 2006க்கு முன்பு பெருமாள், சவுந்தரவல்லி தாயார், கருடாழ்வார், விஷ்வசேனர் சன்னதிகள் மட்டும் இருந்தன. 2006 கும்பாபிஷேகத்தின் போது சக்கரத்தாழ்வார், பக்தஆஞ்சநேயர், லட்சுமிநரசிம்மர், ஸ்ரீஆண்டாள் சன்னதிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது அடுத்த கும்பாபிஷேகத்திற்காக நடந்து வரும் திருப்பணியில் பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதி கர்பகிரகங்களை சுற்றிலும் நீராழி அமைக்கும் பணி சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம், சமயபுரம், பழநி போன்ற பெரிய கோயில்களில் இருப்பது போன்று இங்கும் பிரதான சன்னதிகளை சுற்றிலும் 3 அடி அகலம், 3 அடி ஆழமுடைய நீராழி அமைக்கப்படும் பணி துவங்கியுள்ளது. இப்பணியை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பி.பாரதி ஆய்வு செய்தார். செயல் அலுவலர் கே.விஸ்வநாத், திருப்பணி பொறுப்பாளர்கள் பத்மநாபன், முரளிராஜன் உடனிருந்தனர்.