பொள்ளாச்சி: பொள்ளாச்சி, திப்பம்பட்டி வாராஹி அம்மன் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழா நடந்தது. பொள்ளாச்சி, திப்பம்பட்டி மும்மூர்த்தி ஆண்டவர், வாராஹி அம்மன் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழா, கடந்த , 29ம் தேதி துவங்கி நடைபெறுகிறது. தினமும், ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். நேற்றுமுன்தினம் விழாவை முன்னிட்டு, ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பழங்கள் மற்றும் காய்கறி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.