கமுதி: கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் 100 நாள் வேலையின் போது 1 கிலோ 240 கிராம் எடையுள்ள ஐம்பொன் கிருஷ்ணர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் வில்லால் உடைய அய்யனார் கோயில் அருகே 100 நாள் வேலையில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 1 கிலோ 240 கிராம் எடையுள்ள ஐம்பொன் சிலையான தவளும் பிள்ளை போல் உள்ள கிருஷ்ணர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.இதனைஅடுத்து பணியாளர்கள் வி.ஏ.ஓ., பாண்டியிடம் தகவல் கொடுத்தனர். பின்பு கமுதி தாசில்தார் சிக்கந்தர் பபிதாவிடம் வி.ஏ.ஓ., பாண்டி சிலையை ஒப்படைத்தார்.இதுகுறித்து தொல்பொருள் ஆய்வு குழுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொல்பொருள் துறையினர் ஆய்வுக்கு பின்பு சிலையின் வருடம், விபரங்கள் குறித்து தெரியவரும் என்று தாலுகா அதிகாரிகள் கூறினர்.