தென்மாப்பட்டு அய்யனார் கோயிலில் ஜூலை 15ல் புரவி எடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2022 04:07
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தென்மாப்பட்டு ஆதினமிளகி அய்யனார் கோயிலில் ஜூலை 15ல் புரவி எடுப்பு திருவிழா நடக்கிறது. புரவி எடுப்பை முன்னிட்டு கிராமத்தினர் ஜூலை 1 மாலையில் சவுக்கையில் கூடி பிடிமண் கொடுத்தனர். தொடர்ந்து நேற்று மாலை கிராமத்தினர் அய்யனார் கோவில் வந்தனர். கோயில் முன்பாக உள்ள சேங்கை எனப்படும் குளத்தை வெட்டினர். அடுத்து ஜூலை 15ல் சுவாமி அழைப்பு நடத்தி புதுப்பட்டியிலிருந்து புரவிகளை எடுத்து புரவிப் பொட்டலுக்கு கொண்டு வருகின்றனர். புரவிகளுக்கு சிறப்பு பூஜை நடந்து தீபாரதனை நடந்தது. மறுநாள் கிராமத்தினர் கூடி சுவாமி அழைத்து புரவி பொட்டலிலிருந்து புரவி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.