அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே, கஞ்சநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் உற்சவ விழா நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முன்னதாக, ஜெய விலாஸ் குடும்பத்தினர் முன்னிலையில், உற்சவ சிலையை பூசாரி வீட்டில் இருந்து கொண்டு வரும் நிகழ்ச்சியும், முத்தாலம்மன் சர்வ அலங்காரத்துடன் நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. கரகாட்டம், முளைப்பாரி, கும்மி, கோலாட்டம், நையாண்டி, செண்டை மேளம் வாத்திய நிகழ்ச்சிகள் நடந்தது. பொங்கல் விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். உடன் ஊராட்சி தலைவர் நாகஜோதி, திமுக நிர்வாகி ராஜேந்திரன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.