திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2022 10:07
நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் தேரோட்டத்தை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாதம் பிரம்மோற்சவத்தில் தேர் திருவிழா விமர்சையாக நடக்கும். தேர் 119 பழுதாகியதால் தேரோட்டம் நடைபெறவில்லை.தற்போது ரூ. 43 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை புதிய தேரில் ஹஸ்ததாளாம்பிகை சமேதராய் நடனபாதேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.சேர்மன் ஜெயந்தி தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்தனர். மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது.இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.செயல் அலுவலர் மகாதேவி, கணக்கர் சரவணன். கவுன்சிலர்கள் செல்வகுமார், மலையான், அருள்பிரகாஷ் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.