சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரத்தில் அறம் வளர்த்தநாயகியம்மன் சமேத அருள் மொழிநாதசுவாமி கோயிலில் ஆனித்திருவிழாவையொட்டி நேற்று மாலை தேரோ ட்டம்
நடந்தது.
இக்கோயிலில் ஆனித்திருவிழா ஜூலை 2ல் காலை 10:30 மணிக்கு மேல் காப்புகட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்பாளும், சுவாமியும் காமதேனு, அன்னம், ரிஷபம், யானை , குதிரை ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதியுலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 9 ம் திருவிழாவான நேற்று பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடந்தது. இதில் பஞ்ச மூர்த்திகளும் தேரில் எழுந்தருளினர். தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். இன்று (ஜூலை 11) சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா, ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கவுள்ளது. ஜூலை 12 ல் உற்ஸவசாந்தி நிறைவு விழா நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை சோழபுரம் கிராம மக்கள் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான கண்காணிப்பாளர் வேல்முருகன், தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, ஆத்மநாதகுருக்கள் செய்திருந்தனர்.