பதிவு செய்த நாள்
11
ஜூலை
2022
01:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, திப்பம்பட்டி வாராஹி அம்மன் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி, திப்பம்பட்டி மும்மூர்த்தி ஆண்டவர், வாராஹி அம்மன் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் மாலையில் தினமும் சிறப்பு ேஹாம பூஜைகளும், தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடைபெற்றன.இனிப்பு, மஞ்சள், குங்குமம், சந்தனம், மாதுளை, தேங்காய் பூ, நவதானியம், பழங்கள், காய்கறிகள், வலையல் அலங்காரம் என தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நேற்றுமுன்தினம், நிறைவு நாளில் ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், அம்மன், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.