சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் தங்கத்தேர் : பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2022 02:07
பெரம்பலூர் : சிறுவாச்சூர், அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தேர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர், அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சீர்செய்யப்பட்டு தங்கத்தேர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள தங்கரதம் பல வருடங்களாக பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் தங்கத்தேர் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு உற்சவம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு எந்தவித பணிகளும் செய்யப்படாமல் இருந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதன்படி தங்கத்தேர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உபயதாரர்களாக கட்டணம் செலுத்தி தங்கத்தேரினை இழுத்து வழிபட்டனர். கோயில் உள்பிரகாரத்தில் ஒரு முறை வலம் வந்து தங்கத்தேர் மீண்டும் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இனி கோயில் நடை திறக்கும் நாட்களில் மாலை 6.30 மணியளவில் தங்கத்தேர் இழுக்கப்படும். தங்கத்தேரினை இழுத்து வழிபட பக்தர்கள் ரூ.1,000 கட்டணத்தை கோயில் நிர்வாகத்தில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.