பெண் தெய்வப்படங்களை விரித்த கூந்தலுடன் சித்தரிப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2022 11:07
பெண் தெய்வங்களின் தலை அலங்காரத்தை மூன்று விதமாகச் செய்யலாம் என சிற்ப சாஸ்திரங்கள் கூறுகின்றன. கிரீடம், கரண்டமகுடம், அளகபாரம் என்பவை. கிரீடம், கரண்ட மகுடம் போன்றவை சித்தரிக்கப்படும்போது விரித்த கூந்தலாகவே அமைய வேண்டும். அளகபாரம் என்ற வகையில் தான் ஜடை பின்னலிடுதல்(வேணி பந்தம்), ஜடை மகுடம்(உச்சிக் கொண்டை) போன்ற முறைகள் கூறப்பட்டுள்ளன. கோப வடிவான சில சக்திகளை மட்டும் தான் மகுடம், கிரீடம் போன்றவை இல்லாமல் விரித்த கூந்தலுடன் சித்தரிக்கப்படுவதுண்டு.