Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... தேவிகருமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா தேவிகருமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனி திருவிழா : பிச்சாண்டவர் வீதியுலா.. மாங்கனிகளை வீசி பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனி திருவிழா : பிச்சாண்டவர் வீதியுலா.. மாங்கனிகளை வீசி பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2022
12:07

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடந்தது. சிவபெருமான் வீதியுலாவின் போது பக்தர்கள், மாங்கனிகளை வீசி மகிழ்ந்தனர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான, காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், ஆண்டு தோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடக்கிறது. நேற்று காலை முக்கிய நிகழ்ச்சியான பரமதத்தர் மற்றும் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபம் நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடந்தது. இதில் மேளதாளம் முழுங்க பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்படும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இன்று அதிகாலை, பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திக்குக்கும் மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. நான்கு திசையிலும் வேதபாராயணங்கள், சென்டை, மத்தளம் மேளம் முழங்க, பவழக்கால் விமானத்தில், சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. அச்சமயம் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அர்ச்சனை செய்து, பக்தர்கள், வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்துச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் விழா இன்று 6ம் தேதி துவங்குகிறது. முதல் நாளான ... மேலும்
 
temple news
திருமலை – திருப்பதியில்  ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக விழாவான நவராத்திரி  ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; ஆவணி மூலம் திருவிழாவையொட்டி, ஒய்யார நடனமாடியபடி திரிபுர சுந்தரி சமேத தியாகராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar