Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூனியம்மன் கோயிலில் முளைக்கொட்டு ... சாத்துார் வெங்கடாசலபதி கோயிலில் தேரோட்டம் சாத்துார் வெங்கடாசலபதி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக அம்மன் கோயில்களில் ஆடி திருவிழாவிற்கு சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் தகவல்
எழுத்தின் அளவு:
தமிழக அம்மன் கோயில்களில் ஆடி திருவிழாவிற்கு சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் தகவல்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2022
04:07

வரும் ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 27 பெரிய அம்மன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அம்மன் திருக்கோயில்களான சென்னை மயிலாப்பூர் அருள்மிகு முண்டக்கண்ணி அம்மன் திருக்கோயில், மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை, தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம், உறையூர், அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 27 பெரிய அம்மன் திருக்கோயில்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் வசதிகள் செய்யப்படும்.

திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர்வசதி, கழிப்பிட வசதி, பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன், வாகன நிறுத்துமிடம், ஆகியவை அமைத்து தரப்படும். கூழ் வார்க்கும் இடத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும், பக்தர்கள் நேர்த்தி கடன் முடித்து சென்ற பின்பு திருக்கோயில் வளாகத்தை சுத்தமாக வைக்கவும், பொங்கல் வைக்கும் இடத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் தொடர்புடைய அம்மன் திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்தொற்று காரணமாக ஆடி மாத திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு திருவிழாக்களான ஆடிபெருக்கு, ஆடிவெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் மற்றும் வார இறுதி நாட்களில் கூடுதல் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அந்தந்த திருக்கோயில் சார்பாக கண்காணிக்கப்படுவார்கள். தற்காலிகமாக முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும். திருக்கோயில்களில் திருவிழா நேரத்தில் பொதுமக்களுடைய பாதுகாப்பு, கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி, சமூக இடைவெளி கடைபிடித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar