Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... திருவண்ணாமலையில் பவுர்ணமி வழிபாடு : குவிந்த பக்தர்கள் திருவண்ணாமலையில் பவுர்ணமி வழிபாடு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று வியாச பூர்ணிமா என்கிற குரு பூர்ணிமா !
எழுத்தின் அளவு:
இன்று வியாச பூர்ணிமா என்கிற குரு பூர்ணிமா !

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2022
06:07

இன்று வியாச பூர்ணிமா என்கிற குரு பூர்ணிமா வேதங்களை தொகுத்தவர் புராணங்களை அளித்தவர் மகாபாரதம் என்னும் ஒப்பற்ற காவியத்தை சொல்ல ஏகதந்த விநாயகர் எழுதினார் இப்படிபட்ட பௌர்ணமி தினம் இன்று சதுர்மாசிய விரதம் ஆரம்பம் இந்த நான்கும் மாதங்கள் பல்லுயிர்கள் தோன்றும் உலகை வாழ்வாங்கு வாழவைக்கும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.இதைதான் லோகா சமஸ்தா சுகினோபவந்து என்பது.

தாறுமாறாக இருந்த வேதத்தை ஒழுங்கு படுத்தி, ரிக் , யஜுஸ் , ஸாம , அதர்வ என்ற சதுர் மறைகளாக்கி , ரிக் வேதத்தை பைல முனிவரிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயன முனிவரிடமும், ஸாம வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வண வேதத்தை ஸுமந்த் முனிவரிடமும் ஒப்படைத்து, இன்றளவும் நின்று நிலைபெறச் செய்தவர் என்பதால் அவர் வேதவ்யாஸர் என்றே அழைக்கப் படுகிறார். வ்யாஸர் என்றால் தொகுப்பாளர் (Composer) என்று பொருள்.

வியாசர் வசிஷ்டரின் கொள்ளுப் பேரனும், சக்தி முனிவரின் பேரனும், பராசர முனிவரின் மகனும், சுக முனிவரின் தந்தையும் ஆவார்:

வ்யாஸம் வஸிஷ்ட நஃதாரம்
சக்தேஃ பௌத்ரம் அகல்மஷம்।
பராசராத்மஜம் வந்தே
சுகதாதம் தபோநிதிம்

வியாசரை விஷ்ணுவின் மறுவடிவம் எனக் கூறுவர். இவர் வேறு அவர் வேறு அல்ல என்று பொருள்படுமாறு அமைந்தது இந்த ஸ்லோகம்:

வ்யாஸாய விஷ்ணு ரூபாய
வ்யாஸ ரூபாய விஷ்ணவே।
நமோவை ப்ரஹ்ம நிதயே
வாசிஷ்டாய நமோ நம:।।

வியாசர் க்ருஷ்ண த்வீபம்‌ என்ற இடத்தில் பிறந்ததால் இவரை "க்ருஷ்ண த்வைபாயனர்"  "த்வைபாயனர்" என்றும் அழைப்பர். வசிஷ்டரின் குலத் தோன்றல் என்பதால் வாசிஷ்டர் என்ற‌ பெயரும் உண்டு. இன்றும் சிரஞ்ஜீவியாக வாழும் இவர் பதரிகாஸ்ரமத்தில் இருப்பவர். பாதராயணர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. வியாசர், நால் வேதங்களையும் தொகுத்தது மட்டுமின்றி, வேத ஸாரங்களை ஸ்ம்ருதிகளாகவும் ஆக்கி உதவியுள்ளார். பதினெட்டுப் புராணங்களை இயற்றியவரும் இவரே.‌ அப்புராணங்களைப் பராமரிக்கும் பணியை ஸூத பௌராணிகர் வசம் ஒப்படைத்தார்.

இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூரில் புரட்டாசி மூன்றாவது வார சனிக்கிழமை முன்னிட்டு 250ஆண்டுகள் பழமை வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar