பதிவு செய்த நாள்
14
ஜூலை
2022
05:07
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டி சீலைக்காரியம்மன், அய்யனார் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் மங்கள இசை, குரு பிரார்த்தனை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை புண்யாக வாசனம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி நிகழ்ச்சிகள் நடந்தது. 2ம் நாள் நிகழ்ச்சியில் யாகசாலை பூஜைகளுக்கு பின் பெணகள் தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சதுரகிரி சிவனடியார் திருக்கூட்ட சுவாமிகள் தலைமையில் சீலைக்காரி அம்மன், மங்கள விநாயகர், அய்யனார், கருப்பசாமி முனீஸ்வரர் சுவாமி கோயில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.