மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியிலுள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை மரகதலிங்கத்திற்கு இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட, 21 வகையான பொருட்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து பக்தர்கள் லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். மதியம் .நாகசக்தி அம்மன் - ஸ்வரமூர்த்தி திருக்கல்யாண வைபவத்தை சிவசண்முகபாபு சாமி நடத்தினார். தொடர்ந்து, சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு, 51 சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம், ஜாக்கெட் துணி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. 108 பேருக்கு விருந்து பரிமாறப்பட்டது. மேலும் உலக நலன் வேண்டி, 1008 மலர் அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை சிவசண்முக பாபு சாமி, தியான பீட செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.