ஆடி வெள்ளி : திண்டிவனம் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூழ் படையல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2022 04:07
விழுப்புரம் : திண்டிவனம் எம் ஆர் எஸ் ரயில்வே கேட் அருகில் சோழர் காலத்தை சேர்ந்த பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா துவங்கி உள்ளது. இதில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று ஏராளமான பெண் பக்தர்கள் கூழ், ஆடு மற்றும் கோழி கறி, மீன், முட்டை உள்ளிட்டவைகளில் தயாரான அசைவ உணவுகளை வீட்டில் சமைத்து, குடும்பத்தினருடன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். இது மட்டுமின்றி சிலர் கோவில் வளாகத்தில் அகல் விளக்கேற்றி சர்க்கரை பொங்கலிட்டனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் மூலவராக விளங்கும் பெரிய மாரியம்மனுக்கு கூழ் படைத்தும், அசைவ உணவுகளை கொண்டு வந்திருந்தவர்கள் பிரகாரத்தில் உள்ள காத்தவராயனுக்கு கும்பம் சோறு கொட்டி படைத்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர்.