பதிவு செய்த நாள்
22
ஜூலை
2022
05:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் வளர்மதி, எஸ்.பி. மனோகர், டி.எஸ்.பி.சபரிநாதன், தக்கார் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் நெடுஞ்சாலை, போக்குவரத்து, நகராட்சி, மின்வாரியம், தீயணைப்பு உட்பட அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கொடியேற்ற நாள் முதல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும், தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், ஆக்கிரப்புகளை முழு அளவில் அகற்றி தொடர்ந்து கண்காணிக்கவும், தேர் சொல்லும் நான்கு ரத வீதிகளில் ரோடுகளின் தரத்தை உறுதி செய்யவும், பாதுகாப்பான மின்விநியோகத்தை உறுதி செய்யவும், சிறப்பு பஸ்கள் இயக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் தேர் நிற்குமிடம் மற்றும் ரத வீதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.