சாட்டையடி வாங்கிய பக்தர்கள் திரவுபதி கோவிலில் வினோதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2022 09:07
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், தீ மிதித்த பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த மாதம் 10ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது.கடந்த 10ம் தேதி அரவான் களபலி உற்சவத்தை முன்னிட்டு, திருநங்கைகள் தாலி கட்டுக் கொள்ளும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று தீமிதி திருவிழா நடந்தது. மாலை 5:00 மணியளவில், காப்பு கட்டிய பக்தர்கள் மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து, கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருந்த தீக்குண்டத்தில் இறங்கிய பக்தர்கள், கோவிலுக்குள் வந்து சாட்டையடி வாங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் திரவுபதி அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.