காளஹஸ்தி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2022 08:07
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயிலான விக்ஞான மலை மீதுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற நாமங்கள் முழுக்கத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.அதிகாலை முதலே பக்தர்கள் "பூ" காவடிகளை சுமந்து வந்து சாமி தரிசனம் செய்து தங்களின் நேற்றிக்கடன்களை செலுத்திக்கொண்டனர். இன்று 23.7.2022 சனிக்கிழமை ஆடிக் கிருத்திகையன்று அதிகாலை முதல் இரவு வரை சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விக்ஞான மலை மீதுள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தரிசனத்திற்காக வந்ததாகவும் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததோடு பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபட்டதாக ஸ்ரீகாளஹஸ்தி டிஎஸ்பி விஸ்வநாத் தெரியப்படுத்தினார். கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மேற்பார்வையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திருந்ததோடு காலை முதல் மாலை வரை பக்தர்கள் வரிசையில் தள்ளுமுல்லு ஏற்படாமல் மேற்பார்வையிட்டனர் .சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கோயில் மலை அடிவாரத்தில் பல்வேறு பகுதிகளில் அன்னதானமும் பிரசாதங்ங்களையும் கோயில் சார்பில் வழங்கப்பட்டது .முன்னதாக கோயில் அருகில் உள்ள நாரத புஷ்கரணியில் பக்தர்கள் தங்களின் முடி காணிக்கையை செலுத்த ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தனர் . மேலும் புனித நீராடலுக்காகவும் கோயில் சார்பில் ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி உட்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.