பழநி மலைக்கோயிலில் ஆடி கிருத்திகை விழா : குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2022 08:07
பழநி: பழநி, மலைக்கோயில் ஆடி கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
பழநி மலைக்கோயில் ஆடி கிருத்திகை முன்னிட்டு வெளி மாநில,வெளி மாவட்ட, வெளியூர் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் படிப்பாதை, வின்ச் வழியாக மலைக்கோயில் சென்று வந்தனர். வின்ச் பாதிப்பு: ரோப் கார் பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டேஷனில் மூன்று வின்ச்கள் இயக்கப்பட்டதில், நேற்று முன்தினம் மாலை மூன்றாவது வின்ச் தொழில்நுட்ப காரணமாக பழுதடைந்து நின்றது. எனவே நேற்று இரண்டு வின்ச்கள் மட்டுமே இயக்கப்பட்டது. ஆடிக்கிருத்திகை நாளான நேற்று அதிக பக்தர்கள் வருகை அதிகம் இருந்ததாலும், இரண்டு வின்ச் மட்டும் இயங்கபட்டதாலும். பக்தர்கள் வின்சில் அதிக நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். மலர்காவடி: பெங்களூரில் இருந்து அதிகாலை முதல் பக்தர்கள் மலர் காவடி எடுத்து வந்தனர். இதைத் தவிர முடி காணிக்கை செலுத்துதல், அழகு குத்தி வருதல்,தீர்த்த காவடி எடுத்து வருதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்தனர்.