* மனைவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். * அலுவல் நேரம் முடிந்தபின் தேவையின்றி ஊரைச் சுற்றாதீர்கள். * மனைவியின் ரசனையை தெரிந்து ஒத்துப் போக முயலுங்கள். * வெளியூரில் இருந்து வரும் போது அன்பின் அடையாளமாக பரிசளியுங்கள். * குடும்பத்தினரின் முன்னிலையில் மனைவியை விட்டுக் கொடுக்காதீர்கள். * சண்டை வரும் போது ஈகோ பார்க்காமல் சமாதானமாக வழி தேடுங்கள். * சிறு விஷயமாக இருந்தாலும் மனைவியை பாராட்டத் தவறாதீர்கள். * எந்த விஷயமாக இருந்தாலும் மனைவியின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். * மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிட்டு பேசாதீர்கள். * மாதவிலக்கு, உடல்நலம் இல்லாத நேரத்தில் மனைவிக்கு ஆறுதலாக இருங்கள். * மனைவியின் தியாகத்தை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். * மனச்சோர்வு வரும் போது ‘உன்னால் முடியும்’ என உற்சாகப்படுத்துங்கள். * மனைவியின் தனித்திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். * குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து அடிக்கடி ஆலோசியுங்கள்.