* விடா முயற்சியோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் பணியாற்றுங்கள். * முக மலர்ச்சியோடு பிறருக்கு உதவுபவரே ஆண்டவரின் அன்புக்குரியவர். * தொலைவில் இருக்கும் உடன்பிறந்தவரை விட அருகில் இருக்கும் நண்பரே மேல். * ஞானத்தின் விலை ரத்தினங்களை விட உயர்ந்தது. * நாம் இருக்கும் இடமே நமக்கு நல்லது. * பொல்லாத நாக்கு உள்ளவன் பூமியில் நிலைப்பதில்லை. * நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையினால் அல்ல. * எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள். * நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை * மனிதன் வெறும் மாயைக்குச் சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்குச் சமம். * நன்மை செய்ய அறிந்திருந்தும், அதைச் செய்யாமல் இருப்பது பாவம். – பொன்மொழிகள்