விஜயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு காளஹஸ்தி சிவன் கோயில் தீர்த்த பிரசாதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2022 01:07
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுர மட பிதாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்கள் ஆந்திர மாநிலம் காகினாடா வில் உள்ள (தெலுங்கு) ஆன்மீக சொற்பொழிவாளர் சாகன்ட்டி. கோடீஸ்வரர் ராவ் அவர்களின் ஆசிரமத்தில் சாதுர்மாஸ்ய விரதம் என்கிற தீட்சையை விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் பின்பற்ற உள்ள நிலையில் ஆந்திர மாநில அரசு மற்றும் அறநிலைத்துறை உத்தரவின் பேரில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் தீர்த்த பிரசாதங்களை சாகன்ட்டி கோடீஸ்வர ராவ் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் தேவஸ்தான பிரதான அர்ச்சகர் சம்பந்தம் குருக்கள் கோயில் வேத பண்டிதர்கள் சீனிவாச சர்மா, சங்க மேஸ்வர சாஸ்திரி மற்றும் ஸ்ரீ ராஜா வைத்தீஸ்வரன் கலந்து கொண்டனர்.