காமன்பட்டி முத்து மாரியம்மன், மண்டு கருப்பணசாமி கோயிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2022 04:07
செம்பட்டி: காமன்பட்டி கோயில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
ஆத்தூர் ஒன்றியம், பாளையங்கோட்டை அருகே காமன்பட்டியில் முத்து மாரியம்மன், மண்டு கருப்பணசாமி கோயிலில், ஜூன் 9ல் கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் நிறைவை முன்னிட்டு மண்டல பூஜை நடந்தது. விழாவில் அம்மன் அழைப்பு, கொடிமரம் அபிஷேகத்துடன் கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல், இன்று நடந்தது. கோயில் அருகே வளர்க்கப்பட்ட குண்டத்தில், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சி, அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.