ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயிலில் ஆடி அமாவாசை விழா நடந்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் சுனை நீர் கோயிலின் சிறப்பு. நேற்று நடந்த விழாவில் வேலப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த ஆடி அமாவாசை விழாவில் சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், பன்னீர், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு புளியோதரை, லட்டு, வடை பிரசாதம் வழங்கப்பட்டது.