பாலக்காடு: கேரளா மாநிலத்தில் இன்று ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி பல இடங்களில் நடந்தது.
ஆலுவா சிவன் கோவில், திருவனந்தபுரம் திருவல்லம் பரசுராமர் கோவில், மலப்புரம் திருநாவாயா முகுந்தர் கோவில், கோழிக்கோடு திருநெல்லி சிவன் கோவில், திருச்சூர் மாவட்டத்தில், பாம்பாடி ஐவர் மடம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி விஸ்வநாதர் கோவில், யாக்கரை விஸ்வேஸ்வரர் கோவில் அருகில் அதிகாலை முதல் ஏராளமானோர் மறைந்த பெற்றோர், உறவினர்களுக்கு தரப்பணம் செய்து வழிபட்டனர். பின் வீட்டில் இலை போட்டு முன்னோருக்கு, ஐதீக முறைப்படி உணவுப்படைத்து விட்டு, விரதத்தை முடித்துக் கொள்ளனர். தர்ப்பணைத்தை முன்னிட்டு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியிருந்தனர்.