நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கோடியக்கரை, ஆதி சேது கடலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, திரளான பக்தர்கள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நீராடினர்.
தை அமாவாசை, புரட்டாசி மாத மகாளயபட்ச அமாவாசை போன்ற தினங்களில் பக்தர்கள் கடல் மற்றும் புனித தீர்த்தங்களில் நீராடி, தமது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். இன்று நடந்த ஆடி அமாவாசையை முன்னிட்டு, கோடியக்கரை ஆதிசேது கடல், வேதாரண்யம் சன்னதி கடல், வேதாமிர்த ஏரி போன்ற பகுதிகளில் புனித நீராடிய திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். அதே போல் காமேஸ்வரம் மற்றும் நாகை கடற்கரையில் திரளானவர்கள் புனித நீராடி வழிபட்டனர்.