அன்னூர்: பட்டத்தரசி அம்மன் கோவில் மண்டல பூஜை நேற்றுமுன்தினம் நிறைவு பெற்றது. அன்னூர், கோவை ரோட்டில், பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் இருவாரங்களுக்கு முன் நடந்தது. இதை அடுத்து மண்டல பூஜை நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. பட்டத்தரசி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.