பதிவு செய்த நாள்
28
ஜூலை
2022
06:07
திருச்சுழி: ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் குண்டாற்றில் தர்ப்பணம் செய்தனர்.
திருச்சுழி, காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு இணையானது. இங்கு உள்ள குண்டாற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்தால், காசி, ராமேஸ்வரத்தில் செய்த புண்ணியம் கிடைக்கும். ஆடி அமாவாசை நாளான இன்று திருச்சுழி குண்டாற்றில் உள்ளூர் மற்றும் வெளியூர் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஆடி அமாவாசை, புரட்டாசி, தை, மாதங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். வெளி மாநிலங்களில் இருந்து கூட, இங்கு வந்து திதி கொடுக்க வருவர். ஆனால், பொது மக்களுக்கு போதிய வசதிகள் ஆற்றுப்பகுதியில் இல்லை. உடை மாற்ற, குளிக்க என தனியாக இடமில்லை. ஒரே ஒரு தொட்டியில் உள்ள தண்ணீரில் தான் அனைவரும் குளிக்க வேண்டியுள்ளது. ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் இங்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.