திண்டுக்கல்லில் விஜயநகர பேரரசர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2022 02:08
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோட்டூர் ஆவாரம்பட்டியில் விஜயநகர பேரரசர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கோட்டூர் ஆவாரம்பட்டியில் சின்ராசு என்பவர் தோட்டத்தில் கி.பி.1478-ல் விஜயநகர பேரரசர் தேவமகாராயர் காலத்தைய கல்வெட்டு, திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழுவினர் விஸ்வநாததாஸ்,ரத்தினமுரளிதர், தளிர்சந்திரசேகர் ஆகியோரால் கண்டறியப்பட்டுள்ளது.அவர்கள் கூறியதாவது:2021- செப்டம்பரில் ஆவாரம்பட்டியில் கல்வெட்டு கிடைத்தது. அதன்முன்புறம் வாமண பகவானின் உருவம் இருந்தது. அந்த கல்வெட்டு திருவிடையாற்றம் எனும் அரிய வகை கல்லால் ஆனது. மைதா மாவை கொண்டு தேய்த்து அதில் என்ன எழுதியிருக்கிறது என படிக்க தொடங்கினோம். விஜயநகர பேரரசு காலத்தில் வாழ்ந்த தேவமகாராயர் இங்கு படையெடுத்து வந்த போது கோயில்களுக்கு நிலம் தானம் வழங்கியது, வரிவிலக்கு கொண்டு வந்தது, திண்டுக்கல்லில் மாங்கரை,குடகனாறு ஆகிய 2 அணையை கட்டியிருப்பது குறித்து கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12-ம் நுாற்றாண்டில் திண்டுக்கல்லை பத்மகிரி எனவும்,8-ம் நுாற்றாண்டில் திண்டீஸ்வரம் எனவும் அழைத்துள்ளனர். ஆனால் இதில் முதன் முதலில் திண்டுக்கல் சீமை என்று அச்சிடப்பட்டிருந்தது. குறிப்பாக இந்த கல்வெட்டை சேதப்படுத்தினால் வாரிசு இருக்காது. குடும்பத்தில்நல்லது நடக்காது என்னும் சாப வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தது. இதை முழுமையாக படித்து முடிக்க 1 வருடகாலம் முடிந்தது.அந்த பகுதி இளைஞர்களும் உதவி செய்தனர். ஆய்வு தொடர்கிறது, என்றனர்.