கவேரன் என்ற மன்னன் குழந்தைப்பேறு வேண்டி பிரம்மாவை நோக்கி தவமிருந்தார். இதனால் மகிழ்ந்த பிரம்மா, தன் மகளாகிய விஷ்ணு மாயையை அவருக்கு மகளாக தோன்றச் செய்தார். இவளைத்தான் அகத்தியர் திருமணம் செய்து கொண்டார். இவள் வேறு யாருமல்ல. நம்மை தாயாக காத்து வரும் காவிரி ஆவாள். ஒருநாள் தமிழ்நாட்டின் மேற்கேயுள்ள குடகு மலையில் தவம் செய்து கொண்டிருந்தார் அகத்தியர். அப்போது அவர் தன் கமண்டலத்தில் காவிரியை நீர்வடிவாக்கி அடக்கி வைத்தார். அந்த சமயத்தில் தேவலோக தலைவனான இந்திரனுக்கு, உதவும் வகையில் கமண்டலத்தை கவிழ்த்து விட்டார் விநாயகர். அப்போது பிரவாகமாக பொங்கி வந்தவள்தான் காவிரி.