* நீ என்னதான் முயன்றாலும், தகுந்த காலம் வந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். * தேவையிருக்கும் இடம் சென்று உதவி செய்தலே, ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது. * பிரதிபலன் பாராமல் பிறருக்கு உதவி செய். நிச்சயம் அது தக்க சமயத்தில் கைகொடுக்கும். * நல்லவருக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தை செதுக்குவது போன்றது. * இளமையில் வறுமையும், முதுமையில் செல்வமும் பெற்றால் துன்பமே. * உனது விதியில் என்ன எழுதியுள்ளதோ அதுதான் கிடைக்கும். * கல்வியின் பயனே ஆதிப்பொருளாய் நிற்கும் கடவுளை உணர்வதாகும். * நீ முற்பிறவியில் செய்த நல்வினை, தீவினை பொறுத்தே உனது வெற்றி அமையும். * இதைச்செய் என்று சொல்லும் முன்பே, உன் குறிப்பறிந்து செயலாற்றும் குழந்தைகள் அமிர்தம் போன்றவர்கள். * பிறர் செய்யும் கெடுதலை அப்படியே விட்டுவிடு. அதுதான் உயர்ந்த செயல். * பொருளை சேர்க்காமல், இருப்பதை செலவிட்டால் துன்பத்தில் முடியும். * எதையும் நிதானமாக செய்தால், செயலானது முழுமை பெறும். * கோபம் சீக்கிரமாக தணிந்துவிட வேண்டும். இல்லையேல் அது சண்டையில் முடியும். * சொன்ன சொல்லை காப்பாற்றுவதே, கல்வி கற்றதற்கு அழகு.