* வாழ்க்கையில் ஏற்றமும் வரும். இறக்கமும் வரும். எதற்கும் தயாராக இரு. * அற நுால்களை படி. இதுவே உன்னை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும். * பிறர் போற்றினால் மகிழ்ச்சி அடையாதே. பிறர் துாற்றினால் வருந்தாதே. * ஆசை ஒருவனை அழிக்கும் குணம் கொண்டது. ஆனால் அன்பு வளர்க்கும் குணம் கொண்டது. * பிறருடைய குற்றங்களை ஆராயாதே. உன்னுடைய குற்றங்களை மறைக்காதே. * உன் எண்ணத்தை பொறுத்துதான், உனது வாழ்வானது தீர்மாணிக்கப்படுகிறது. * தர்மவழியில் தேடிய செல்வம் பல தலைமுறைக்கும் பயன் தரும். * மனிதனையும், விலங்கையும் பிரித்துக் காட்டும் கருவி ஒழுக்கம். * அன்பினால் கடவுளை வணங்கு. அவரிடம் வியாபாரம் செய்யாதே. * மானம் காக்க ஆடையும், மனதைக் காக்க வழிபாடும் அவசியம். * பெற்றோரை விட சிறந்தவர் யாருமில்லை. * ஞானிகளைப் பழித்தவன் மறுபிறப்பில் பைத்தியமாகப் பிறப்பான். * உறவினர் உன்னை கைவிட்டால்கூட, நீ செய்த தர்மம் கைவிடாது. * புத்தகத்தால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது. * எல்லாம் தெரிந்தவர்களும் இல்லை; எதுவுமே தெரியாதவர்களும் இல்லை.