ஆடம்பரபக்தி, எளியபக்தி இதில் எதைக் கடவுள் விரும்புகிறார்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2012 05:08
விருப்பு வெறுப்பைக் கடந்தவர் கடவுள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடும் அவருக்கு கிடையாது. பக்தி என்பது மனதைப் பொறுத்த விஷயம். ஆடம்பரமாய்ச் செய்தால் பலன் அதிகம் என்றோ,எளிமையாகச் செய்தால் குறைவு என்றோ எண்ணத் தேவையில்லை. உள்ளத் தூய்மையே பக்திக்கு தேவை. மன்னர் கட்டிய கற்கோயிலை விட, பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயிலில் சிவன் விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதை பெரியபுராணம் காட்டுகிறது. பொருளாதாரம் இடமளித்தால் ஆடம்பரமாக வழிபடுங்கள். இல்லாவிட்டால் எளிமையைப் பின்பற்றுங்கள். எதுவானாலும் உள்ளன்போடு செய்யுங்கள். இறைவன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்.