Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சள்பட்டணத்தில் மண்டலபிஷேக விழா அழகுவள்ளி அம்மன் கோயில் 12ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா அழகுவள்ளி அம்மன் கோயில் 12ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா: 1.25 லட்சம் சிலைகள் தயார்!
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழா: 1.25 லட்சம் சிலைகள் தயார்!

பதிவு செய்த நாள்

05 ஆக
2022
03:08

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும், ஹிந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில், சில மாதங்களாக நடந்து வந்தது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், காகிதக்கூழ், கிழங்கு மாவு வாயிலாக தயாரிக்கப்பட்ட சிலை பாகங்கள், திருப்பூர் மாவட்டம் அலகுமலை மற்றும் கொடுவாய் அருகே கொண்டு வரப்பட்டு, அவற்றைப் பொருத்தும் பணி நடக்கிறது. ஈரோடு மற்றும் பவானிசாகரிலும் இப்பணி நடக்கிறது. தொடர்ந்து, சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இப்பணி முழுமையாக நிறைவு பெற்ற பின், அடுத்த வாரத்தில், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்ப தயாராக உள்ளது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: கோவையில் 6 ஆயிரம், திருப்பூரில் 5 ஆயிரம் உட்பட, தமிழகம் முழுவதும், 1.25 லட்சம் இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பின், விநாயகர் ஊர்வலம் நடக்க உள்ளதால் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் 31ம் தேதி முதல், செப்., 4ம் தேதி வரை கொண்டாட உள்ளோம். செப்., 3ம் தேதி, திருப்பூர் மாநகரம், ஈரோடு, பொள்ளாச்சி, 4ம் தேதி கோவை, நீலகிரியில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.திருப்பூர் விசர்ஜன ஊர்வலத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், கோவையில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவும் பங்கேற்க உள்ளனர். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா, பிரிவினை வாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு கொண்டாடப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar