வாழ்வில் வெற்றி பெற முயற்சித்தால் போதுமா? அல்லது கடவுளின் அருள் தேவையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2012 05:08
முயற்சி திருவினையாக்கும் என்பது முதுமொழி. திருவினை என்ற சொல்லில் உள்ள திரு என்ற சொல்லை சற்று சிந்தித்துப் பார்த்தால் போதும். இறைவனுக்கு திருவுடையான் என்று பெயர். வெற்றி, மகிழ்ச்சி, மங்களம், கவுரவம், செல்வம், அழகு என பலபொருள் தரும் ஒரு சொல் திரு. முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எழுவது நம் அறிவில் தான். அறிவுக்கு அப்படிப்பட்ட ஆற்றலை விலை கொடுத்து வாங்க முடியுமா? அல்லது வேறு யாராவது தர முடியுமா? இறையருள் இருப்பவர்களுக்குத்தான் அறிவாற்றல் அதிகமாக இருக்கும். தொடர்ந்து இறை வழிபாட்டுடன் நம் முயற்சிகளை செய்து கொண்டிருந்தால் வினை எனப்படும் முயற்சியின் பலன் திரு எனும் அடைவுடன் சேர்ந்து விடும். உங்கள் முயற்சி இறையருளால் திருவினையாகிறது.