பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில், பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு பெருமாள் யானை வாகனத்தில் அலங்காரமாகி வீதி வலம் வந்தார். பின்னர் கோயில் வளாகத்தில் ஆண்டாள் நின்ற திருக்கோலத்தில் பெருமாளுடன் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. இன்று குதிரை வாகனத்தில் பெருமாள் அருள் பாலிக்க உள்ளார்.