சிவகங்கை, : சிவகங்கையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. விற்பனை மந்தமாக இருப்பதாக சிலை செய்பவர்கள் தெரிவித்தனர்.ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் அதிகளவில்பொதுமக்கள் ஆர்டர் கொடுப்பார்கள்.சிவகங்கையில் சாலையோரத்தில் தங்கியிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரை அடி முதல் இரண்டரை அடி வரை விநாயகர் சிலைகள் செய்து வருகின்றனர்.
இதில் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் மாவு மற்றும் சுண்ணாம்பு பொருட்களை கலந்து சிலைகளை செய்து வருகின்றனர். உயரத்திற்கேற்ப 300 ரூபாய் முதல் 550 ரூபாய் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகளவு உயரம் தேவைப்பட்டால் ஆர்டர் கொடுத்தால் சிலைகளை தயாரித்து வழங்குகின்றனர்.சிலை தயாரிப்பவர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தயாரிக்கப்படுகின்றன. சிலைகளில் வாட்டர் கலர் வர்ணம் பூசி விற்பனை செய்கிறோம். பெரிதாக சிலைகளுக்குஆர்டர் வரவில்லை. விநாயகர் சிலை விற்பனை மந்தமாக உள்ளது. ஒரு குடும்பம் முழுவதும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு நாளைக்கு 50 சிலைகள் வரை தயாரிக்க முடியும் என்றார்.