ஆடி செவ்வாய் : பத்திரகாளியம்மன் கோவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2022 03:08
காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று ஆடி செவ்வாய் முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளி உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் காளியம்மனை தரிசனம் செய்வது வழக்கம் மேலும் பக்தர்கள் வேண்டுதலுக்கு இணையாக நெற்றுக்கடன் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அம்பகரத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் நேற்று ஆடி மூன்றாம் செவ்வாயை முன்னிட்டு பத்திரகாளியம்மனுக்கு பல்வேறு திரவங்களான சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டும் வெளியூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பத்ரகாளியம்மன் வழிபட்டனர். இதுபோல் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில்.பார்வதி சிவன் கோவில். கைலாசநாதர் கோவில் மற்றும் பல்வேறு முக்கிய கோவில்களில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு பிரசாதம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.