பதிவு செய்த நாள்
11
ஆக
2022
11:08
அவிநாசி: போத்தம்பாளையம் பெரியகருப்பராயன் கோவில் திருவிழா விமரிசையாக நடந்தது.
அவிநாசி சேவூர் அருகே உள்ள போத்தம்பாளையத்தில் பெரிய கருப்பன் கோவில் உள்ளது. மூன்றாண்டுக்கு ஒரு முறை விழா நடத்தப்படுவது வழக்கம். இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விழா நடத்த அவிநாசி தாசில்தார் தடை விதித்து, பின் சமாதான பேச்சு மூலம் உடன்பாடு ஏற்பட்டு, கடந்த மாதம், 26ம் தேதி இரவு சாமி சாட்டுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 :00 மணிக்கு படைக்கலம் புறப்பட்டது. அதிகாலை 2:00 மணிக்கு, இரவை பகலாக்கும் வகையில், வான வேடிக்கை நடந்தது. பின், குதிரை வாகன பூஜை, அதிகாலை, 3:00 மணிக்கு பேச்சியம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதிகாலை, 5:00 மணிக்கு, கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். 2 நூற்றுக்கணக்கில் கிடாய்கள் வெட்டப்பட்டன. திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து, 5,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை, போத்தம்பாளையம் கிராம மக்கள், ராயர் பாளையம் பூசாரிகள், பொதுமக்கள் போத்தாங்குல செல்வந்தர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.