பதிவு செய்த நாள்
11
ஆக
2022
05:08
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோவிலில், திரௌபதி தர்மராஜா திருக்கல்யாணத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரௌபதி அம்மன் கோவில் விழா, ஜூலை 29 இல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, உள்ளிட்ட நிகழ்வுகளை முன்னிட்டு, தினமும் இரவில் சிறப்பு அதிசய ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், முக்கிய விழாவான திரௌபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு நேற்று முன்தினம் இரவில், சிலுகவயல் கிராம மண்டகப்படியாக நடைபெற்றது.திரௌபதி அம்மனுக்கும், தர்மராஜாவிற்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. நடைபெற்ற திருக்கல்யாணத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து பேரவை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர். முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.19 இல் நடைபெறுகிறது.