மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிம்மோற்ஸவ விழாவில் நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2022 05:08
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் நாளை அலங்கார குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டிற்கான பிரம்மோற்ஸவ திருவிழா வருகிற ஆக.3 ந் தேதி காலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது சுவாமிகள் தினந்தோறும் இரவு பறங்கி நாற்காலி,சிம்மம், பல்லக்கு ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு எழுந்தருளி அங்கிருந்து அலங்கார குளத்திற்கு சென்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதில் பட்டத்தரசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் கோபிமாதவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.