பதிவு செய்த நாள்
12
ஆக
2022
04:08
வடவள்ளி: வடவள்ளியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஆவணி அவிட்டத்தை ஒட்டி, பூணூல் மாற்றும் விழா நடந்தது. தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஆவணி அவிட்டத்தையொட்டி, பூணூல் மாற்றும் விழா, வடவள்ளி தாம்ப்ராஸ் ஹாலில் நேற்று நடந்தது. இதில், ரிக் உபகர்மா, யஜூர் உபாகர்மா, எனும் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், புரோகிதர்கள் கணபதி, கார்த்திக், சுரேஷ் ஷர்மா ஆகியோர், பூணூல் மாற்றுவதற்கான யாகங்களை நடத்தினர். உலக நலன், சமுதாய முன்னேற்றம், குடும்ப வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்காக பிரார்த்தனை செய்து பூணூல் மாற்றப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு பிராமணர் சங்க வடவள்ளி கிளை தலைவர் சங்கரன் கூறுகையில்,ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் அடிப்படையில் பூணூல் மாற்றும் விழா நடத்தப்படுகிறது. வரும், 31ம் தேதி, சாம உபாகர்ணா பூணூல் மாற்றும் யாகம் நடத்தப்படும்,"என்றார்.