காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு 2200 திருவிளக்கு பூஜை நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் வாரம் செவ்வாய்,வெள்ளி உள்ளிட்ட நாட்களில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இக்கோவிலில் நேற்று ஆடிவெள்ளியை முன்னிட்டு பத்ரகாளியம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.காலை 10மணிக்கு துவங்கிய பூஜையில் 2200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்கள் குடும்பம் நன்மையடைய வேண்டும் என்று திருவிளக்கு பூஜை செய்தனர். மேலும் திருவிளக்கு பூஜையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்