திருக்கூடல் மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் கோயிலில் பிரம்மோற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2022 03:08
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் கோயிலில் நவநீத பெருமாள் 103 வது ஆண்டு பிரம்மோற்ஸவ விழா துவங்கியது. காலை பூஜைகள் முடிந்து பல்லக்கில் நவநீத பெருமாள் புறப்படாகி பக்தர்களில் திருக்கண்ணில் எழுந்தருளினார். செப். 3 வரை மதுரை, கட்டிக்குளம் பகுதிகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி முடிந்து செப். 4ல் திருப்பரங்குன்றம் திரும்புகிறார். விழா ஏற்பாடுகளை மேனேஜிங் டிரஸ்ட் தட்சிணாமூர்த்தி செய்து வருகிறார்.