பதிவு செய்த நாள்
16
ஆக
2022
10:08
தஞ்சாவூர், கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய சிறப்பை போற்றும் வகையில், 7 அடி உயர வெண்கல சிலை நேற்று திறக்கப்பட்டது.
தஞ்சாவூர் கும்பகோணத்தில் 1897 ம் ஆண்டு மூன்று நாள்கள் போர்ட்டர் டவுன் ஹாலில் வேதாந்தப் பணி என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார். அதனை போற்றும் 7 அடி உயர வெண்கல சிலை நேற்று திறக்கப்பட்டது. சிலையை கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹால் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் தலைமை, புதுச்சேரி ராமகிருஷ்ண மடம் மூத்த துறவி தவத்திரு ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்தர் சுவாமி, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மட தலைவர் விமூர்த்தானந்தர் விவேகானந்தர் திருவுருவ வெண்கலச்சிலையை திறந்து வைத்தார்.
கொல்கத்தா உலகளாவிய ராமகிருஷ்ண மடம் துணைப்பொதுத்தலைவர் தவத்திரு ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆசியுரையாற்றினார்.
சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரம செயலாளர் ஸ்ரீமத் சுவாமி யதாத்மானந்தர், கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேச பெருமாள், நாராயணி நிதி லிமிடெட் நிறுவனர் கார்த்திகேயன், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளரான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்; போர்டர் டவுன் ஹாலை புராதான சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். நல்லவேலை விவேகானந்தர்சிலை வைத்து பிறகு தான் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக புராதானசின்னமாக அறிவித்திருந்தால் சுவாமி விவேகானந்தர் சிலை நிறுவ முடியாது. அதற்கான நடவடிக்கைகள் பல உள்ளதால் அடிப்படை வழிபாடுகள் கூட செய்ய அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் இனி புராதானசின்னமாக அறிவித்தால் பிரச்சனை இல்லை.
நான் 45 ஆயிரம் வழக்குகளை முடிந்துள்ளேன். ஏன் என்றால் மற்ற நீதிபதிகள் 10.30 மணிக்குதான் நீதிமன்றத்துக்கு வருவார்கள். ஆனால் நான் 9 மணிக்கே நீதிமன்றத்துக்கு சென்று விடுவேன். அதற்கு காரணம் சுவாமி விவேகானந்தர் பள்ளியில் நான் ஓராண்டு படித்தேன். அப்போது கற்க ஒழுங்கம் தான். விவேகானந்தர் சிலை திறப்பு விழா நடப்பது நமக்கு கிடைத்த பாக்கியம், நம்மை தூய்மைப்படுத்த, வேகப்படுத்த, சக்தி அளிப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது. இதை நாம் அப்படியே உள்வாங்கிக்கொண்டு வாழ்க்கையை மேம்படுத்தினால் சமுதாயம் சிறப்பாகும், தேசம் சிறக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.