பதிவு செய்த நாள்
16
ஆக
2022
12:08
சென்னை: ஈக்காட்டுத்தாங்கல், சுந்தர லட்சுமி கணபதி கோயிலில் ஆகஸ்ட் 21ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
சென்னை: ஈக்காட்டுத்தாங்கல், சுந்தர் நகரில் சுந்தர லட்சுமி கணபதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வரும் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கன்னிகா லக்கத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு, 17.08.22 காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் பந்தகால் முகூர்த்தம் நடைபெறுகிறது.19.08.22 28.08.22 வெள்ளி கோ பூஜை, மங்கள வாத்தியம், நவகிரஹ ேஹாமம், தனபூஜை, கன்னியா பூஜை, பூர்ணாஹீதி நடைபெறுகிறது. அன்று மாலை மங்கள வாத்தியம், மங்கள வாத்தியம், யாகசாலை பிரவேசம், ரக்ஷாபந்தனம், முதல் யாகபூஜைகள் ஆரம்பம்.
20.08.22 காலை 8.30 மணி முதல் மங்கள வாத்தியம், புதியவிக்ரகங்களுக்கு அஷ்டாதசக்ரியை கரிகோலம், இரண்டாம் யாகபூஜைகள் ஆரம்பம். மாலை 5.30 மணிக்கு மங்கள வாத்தியம், பிம்ப ப்ரதிஷ்டை, நாடி சந்தானம், மூன்றாம் யாகபூஜைகள் ஆரம்பம்.
21.08.22 காலை 7.00 மணி முதல் 4ம் யாகபூஜைகள் ஆரம்பம். காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9.45க்கு விமானம் மற்றும் ஆதி கணபதி, சுந்தர லட்சுமி கணபதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. 22.08.22 முதல் சுந்தர லட்சுமி கணபதி சுவாமிக்கு 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறுகிறது. 9.10.22 அன்று மண்டலாபிஷேகம் பூர்த்தி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனா்.